காணாமல் போனதாய் தேடப்பட்டு வந்த சுகோய் 30 போர் விமானம் விபத்துக்குள்ளானதாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பிரான்ஸின் மிராஜ் போர் விமானங்களுக்கு பதிலாக 1997 ஆம் ஆண்டு சுகோய் ரக விமானங்கள் சேர்க்கப்பட்டது. ஆனால், இது தொழில் நுட்பகோளாறு ஏற்பட்டு அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகிறது.
இந்நிலையில், கடந்த 23 ஆம் தேதி அஸ்ஸாம் தேஜ்பூர் விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சிக்கு புறப்பட்டது சுகோய் ரக விமானம்.
புறப்பட்ட அரை மணிநேரத்தில் ரேடாரின் இணைப்பை விமானம் இழந்தது. எனவே, மாயமான விமானத்தை தேடும் பணி நடைபெற்று வந்தது.
தேடப்பட்டு வந்த நிலையில் விமானத்தின் பாகங்கள் அருணாசல பிரதேச மாநில மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து அந்த விமானம் விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அதில் பயணம் செய்த விமானிகள் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.