’அதிசயம்’ - இந்திய தேசியக் கொடியுடன் பறந்த பாகிஸ்தான் விமானம்
’அதிசயம்’ - இந்திய தேசியக் கொடியுடன் பறந்த பாகிஸ்தான் விமானம்
இந்திய நாட்டின் 70-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த விழாவிற்கு சிறப்பு சேர்க்கும் விதமாக மத்திய கலாச்சாரத்துறை ஒரு அனிமேசன் வீடியோவை டுவிட்டரில் பதிவேற்றம் செய்தது.
அந்த வீடியோவில், சீனா-பாகிஸ்தான் இணைந்து தயாரித்த ஜெஎப்-17 ரக இரண்டு போர் விமானங்கள் இந்திய தேசியக் கொடியுடன் பறப்பதாக அமைந்திருந்தது. இதனை டுவிட்டரில் பார்த்த சிலர் தவறை சுட்டிக்காட்டினர். இதையடுத்து உடனடியாக அந்த வீடியோ டுவிட்டரில் இருந்து நீக்கப்பட்டது. பாகிஸ்தானின் ஜெஎப்-17 போர் விமானத்தைப் போலவே, இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்ட இலகு ரக தேஜாஸ் போர் விமானமும் அமைந்துள்ளது. எனவே, கவனக்குறைவால் இந்த தவறு நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.