Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சரக்கு ரயில் மோதியதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளம்பெண்-வீடியோ

சரக்கு ரயில் மோதியதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளம்பெண்-வீடியோ
, திங்கள், 5 ஜூன் 2017 (12:46 IST)
சரக்கு ரயில் மோதியதில் இளம்பெண் ஒருவர் அதிர்ஷ்டவ்சமாக உயிர் தப்பினார்.


 

இன்று நாம் சாலைகளில் அதிகம் கவனிக்கும் காட்சிகள் செல்போனில் பேசிக்கொண்டே கடப்பது அல்லது ஹெட்போனை காதில் மாட்டிக்கொண்டே செல்வது. இதனால் பலபேர் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். இது குறித்து பல்வேறு தரப்பில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினாலும் தொடர்ந்து இதே தவறை செய்து கொண்டுதான் உள்ளனர்.

குர்லா ரெயில் நிலையத்திலும் அது போன்ற சம்பவம் நடந்துள்ளது.  சம்பவத்தன்று ஹெட்போனை  மாட்டிக் கொண்டு  இளம்பெண் பாண்டுப்பை சேர்ந்த பிரதிக்ஷா(19). என்பவர் யாரிடமோ பேசிக்கொண்டு தண்டவாளத்தை கடந்தார். அதாவது 7–ம் எண் பிளாட்பாரத்திற்கு செல்வதற்கு நடைமேம்பாலம் வழியாக செல்ல சிரமப்பட்டு தண்டவாளத்தில் இறங்கினார். அப்போது பின்னால் வந்த சரக்கு ரயிலை கவனிக்க தவறினார்.

திடீரென திரும்பி பார்த்த பிரதிக்ஷா அதிர்ச்சி அடைந்து ஓட துவங்கினார். ரெயில் நெருங்கியதை பார்த்து இனி தப்ப இயலாது என்பதை உணர்ந்த அவர் திடீரென திரும்பி நின்று கண்ணை இறுக மூடிக்கொண்டு, கையால் தலையை பிடித்துக் கொண்டும் நின்றார். அப்போது சரக்கு ரெயில் என்ஜின் பிரதிக்ஷா மீது மோதிவிட்டு சென்றது. இதில் நிலைகுலைந்த பிரதிக்ஷா தண்டவாளத்தில் விழுந்தார். என்ஜினை அடுத்து ஒரு வேகனும் அவரை கடந்து சென்றது. பிளாட்பாரத்தில் நின்றிருந்த பயணிகள் அச்சத்தில் கூச்சலிட்டனர். அந்த பெண் இறந்திருப்பார் என்று முடிவுக்கு வந்தனர்.

ஆனால் அதிசயமாக பிரதிக்ஷா லேசான காயத்துடன் உயிர் தப்பினார். பயணிகள் உடனடியாக வரை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த காட்சிகள் அனைத்தும் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



நன்றி: india tv

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினகரன் குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் எஸ்கேப்பாகிய தம்பிதுரை!