Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை… கேவலமான தீர்ப்பளித்த ஊர்ப்பஞ்சாயத்து!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (18:18 IST)
உத்தர பிரதேச மாநிலத்தில் சிறுமி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமையும் அதையொட்டி கிராமப் பஞ்சாயத்து அளித்த தீர்ப்பும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் 23ம் தேதி மாலையில்  பாதிக்கப்பட்ட சிறுமி வயலில் காய்கறிகள் பறித்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கே வந்த அதே ஊரைச் சேர்ந்த இளைஞர் சிறுமியை வலுக்காட்டாயமாக பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதையடுத்து சிறுமியின் குடும்பம் ஊர்ப்பஞ்சாயத்தில் புகார் அளிக்க, அவர்களோ சிறுமிக்கு இளைஞரின் குடும்பம் 50000 நிதியுதவி அளிக்கவேண்டும் என்றும் சிறுமி வேண்டுமானால் இளைஞரை 5 முறை செருப்பால் அடித்துக் கொள்ளலாம் என்றும், அத்தோடு இளைஞரை விட்டுவிட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

ஆனால் இதை ஏற்காத சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளிக்க, போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கும் அனுப்பியுள்ளனர். மருத்துவ அறிக்கை வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோதனை ஓட்டம் வெற்றி! டிசம்பரில் வருகிறது புதிய மெட்ரோ ரயில் சேவை! - சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

அதிரடியில் இறங்கிய காவல்துறை! ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை சுட்டுப் பிடித்த போலீஸ்! - சென்னையில் பரபரப்பு!

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்