Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இம்ரான்கானின் முயற்சி நிச்சயம் பலிக்காது: பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெய்சங்கர்

Webdunia
ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (18:01 IST)
அமெரிக்க-இந்திய உறவை சீர்குலைக்க நினைக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் முயற்சி நிச்சயம் பலிக்காது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் பாகிஸ்தான் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் ’சீனாவே தங்கள் நாட்டின் நம்பிக்கைக்கு உரிய கூட்டாளி என்று சீனாவை கட்டுப்படுத்த அமெரிக்கா, இந்தியாவை பயன்படுத்துவதாகவும் கூறினார். மேலும் அமெரிக்காவின் கையாளாக இந்தியா இருக்கிறது எனவும் அவர் குற்றம் சாட்டினார் 
 
பாகிஸ்தான் பிரதமரின் இந்த பேட்டிக்கு பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இம்ரான்கான் கூறியபோது, இம்ரான்கானின் கருத்து அவரது நாட்டுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் இந்தியாவுக்கு தனிப்பட்ட நாகரீகம் உள்ளதாவும் கூறினார். ஆங்கிலேயரின் ஆட்சிக்கு பிறகு கிடைத்த சுதந்திரத்தை பெரும் பொக்கிசமாக இந்தியா கருதுவதாகவும் இந்திய-அமெரிக்க உறவை சீர்குலைக்க பாகிஸ்தான் பிரதமர் எடுக்கும் முயற்சி எதுவும் பலிக்காது என்றும் பதிலடி கொடுத்துள்ளார். அமைச்சர் ஜெய்சங்கரின் இந்த பதிலடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments