Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தி: மத்திய அமைச்சர்அனுராக் தாக்கூர் கண்டனம்

Anurag singh thakur
, வெள்ளி, 10 மார்ச் 2023 (18:25 IST)
காஷ்மீரில் பத்திக்கை சுதந்திரம் குறித்து நியூயார்க் டைம்ஸ் செய்திக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஊடகம் நியூயார்க் டைம்ஸ் சமீபத்தில் காஷ்மீரில் பத்திரிகை சுதந்திரம் குறித்து கட்டுரை ஒன்றை எழுதி இருந்தது.. ஊடகங்கள் காஷ்மீரில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் செய்திகள் வெளியிடுவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது
 
இந்த செய்திக்கு மத்திய தகவல் மற்றும் செய்தி ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார். நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் இந்தியா குறித்து செய்தி வெளியிடும்போது நடுநிலையை கடைபிடிப்பதை ஏற்கனவே நிறுத்திவிட்டது என்றும் காஷ்மீர் குறித்து தவறான செய்தியையும் கற்பனையான செய்தியையும் வெளியிட்டது மட்டுமின்றி இந்தியாவின் ஜனநாயக அமைப்பு குறித்து பொய்ச் பிரச்சாரம் செய்து உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். 
 
இந்த பொய்ச் செய்திகள் நீண்ட நாட்களுக்கு நீடிக்க முடியாது என்றும் இந்தியா மீதும் நமது பிரதமர் மீதும் வெறுப்புணர்வை வளர்க்கும் எண்ணம் கொண்ட சில வெளிநாட்டு மீடியாக்கள் இந்திய ஜனநாயகம் மற்றும் பன்முகத் தன்மை குறித்து பொய்யான செய்திகளை பரப்ப முயற்சித்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காவல் நிலையத்தில் மது அருந்திவிட்டு நடனம்: 5 காவலர்கள் பணிநீக்கம்..!