Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாடு, ஒரே தேர்தல் அடுத்த ஆட்சியில் அமல்படுத்தப்படும்: அமித் ஷா உறுதி

Siva
திங்கள், 27 மே 2024 (08:28 IST)
நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை பாஜக கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்த ஆட்சியில் ஒரே நாடு ஒரே தேர்தல் உறுதி செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்

சமீபத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேட்டி ஒன்றில் கூறுகையில் நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் மோடி அரசின் அடுத்த ஆட்சியில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்

மேலும் வெயில் காலத்தில் தேர்தல் நடத்துவதை காட்டிலும் குளிர் காலத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்திய கூறுகள் குறித்து சிந்தித்து வருகிறோம் என்றும் ஒரே நேரத்தில் நாடு முழுவதும் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் நடத்தினால் செலவுகள் குறையும் என்றும் அவர் கூறினார்

மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறினார். மொத்தத்தில் மீண்டும் பாஜக ஆட்சி வந்தால் அடுத்து நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுடன் அனைத்து மாநிலங்களுக்கும் சட்டமன்ற தேர்தலும் நடைபெறும் என்பது அமித்ஷாவின் இந்த பேட்டியில் இருந்து தெரிய வருகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments