Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனம் திருந்திய விஜய் மல்லையா ..? ரூ.12ஆயிரம் கோடி கடனை திருப்பி அளிக்க சம்மதம் !

Webdunia
செவ்வாய், 31 மார்ச் 2020 (13:32 IST)
மனம் திருந்திய மல்லையா ..? வாங்கிய கடனை திருப்பி அளிக்க சம்மதம் !

வங்கிகளிடம் பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்துவதாக பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் முன்னணி தொழில் அதிபராக இருந்தவர் மல்லையா. விஜய் மல்லையா என்றாலே கண்ணதாசன் பாடல் வரிகளைப் போல ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோல மயில் என் துணையிருப்பு என்பதாகவே இருந்தது. பின்னர் கிங் பிஷர் விமான போக்குவரத்தில் பெரிய நஷ்ட அடி விழ நொறுங்கிப்போனார்.

அடுத்ததாக வந்தது பிரச்ச்னை வங்கிகளில் வங்கிய 9 ஆயிரம் கோடிக்கு மேலான தொகையை திரும்ப செலுத்தாமல் நாட்டை விடு ஓடி இன்று லண்டனின் நிம்மதியின்றி  தலைமறைவாக  வாழ்கிறார் விஜய் மல்லையா. தற்போது அந்த கடன் தொகை வட்டியெல்லாம் சேர்த்தால் ரூ, 12 ஆயிரம் கோடியாக உயர்ந்து வராக்கடனாக நிலுவையிலுள்ளது.

ஆனாலும்  இந்தியா அவரை நாடு கடத்த லண்டன் நீதிமன்ற உதவியை நாடியது. இதன் மீதான விசாரணை தற்போது நடைபெற்று வந்த நிலையில் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பதாக லண்டன் நீதிமன்றம் கூறியது.

இந்நிலையில், விஜய் மல்லையா தனது டுவிட்டர் பக்கத்தில், தான் வங்கிகளிடம் பெற்ற கடன் முழுவதையும் திருப்பிச் செலுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடனைத் திரும்ப பெற வங்கிகளும், எனது சொத்துகளை விடுவிக்க அமலாக்கத்துறையும் விரும்பவில்லை அதனால் நிதியமைச்சர் தலையிட்டு இதற்குத் தீர்வு காணவேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி இங்கிலாந்து, மாலத்தீவு பயணம்: வர்த்தகம், உறவுகள் மேம்பாட்டில் புதிய அத்தியாயம்!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை.. ஒரு வாரம் ஆகியும் சிக்காத குற்றவாளி..!

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்.. வெள்ளி விலையும் உயர்வு..!

அமலாக்கத்துறை முக்கிய அதிகாரி திடீர் ராஜினாமா.. இரு முதல்வர்களை கைது செய்தவர்..!

முதல்வர் ஸ்டாலின் சகோதரர் மு.க.முத்து காலமானார்! அரசியல் பிரபலங்கள் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments