தண்டவாளத்தில் படுத்து தூங்கிய வெளிமாநில தொழிலாளர்கள் ரயில் மோதி மரணம்
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே உள்ளது. மத்திய சுகாதாரத் துறையும், மாநில சுகாதாரத்துறைகளும், கொரோனாவுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுத்த போதிலும் கொரோனா வைரஸ் பரவும் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியவில்லை
இந்த நிலையில் சொந்த மாநிலத்தில் இருந்து பணி நிமித்தமாக வெவ்வேறு மாநிலத்திற்கு சென்றவர்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக வேலையின்றி பசியும் பட்டினியுமாக உள்ளனர். அவர்களில் பலர் சாலை வழியே தங்கள் சொந்த ஊருக்கு ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் நடந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சட்டீஸ்கர் மாநிலத்தில் இருந்து ஒருசில வெளி மாநில தொழிலாளர்கள் நடந்தே தங்கள் சொந்த ஊரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது சோர்வு காரணமாக ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கியதாக தெரிகிறது
இந்த நிலையில் அதிகாலை 4 மணிக்கு அந்தப் பக்கம் வந்த சரக்கு ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கியவரக்ள் மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே 15க்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் மரணம் அடைந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சொந்த ஊரை நோக்கி நடந்தே சென்ற வெளிமாநில தொழிலாளர்கள் சரக்கு ரயில் மோதி மரணம் அடைந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது