Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காஷ்மீரில் 4000 பேர் கைது – இடமில்லாமல் திணறும் சிறைகள் !

Advertiesment
காஷ்மீரில் 4000 பேர் கைது – இடமில்லாமல் திணறும் சிறைகள் !
, திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (09:13 IST)
காஷ்மீரில் கடந்த 2 வாரங்களில் சுமார் 4000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கிவதற்கு முன்பாக காஷ்மீர் வெளியுலகத்தில் இருந்து துண்டிக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து படிப்படியாக இரண்டு வாரங்களுக்குப் பிறகுதான் படிப்படியாக தொலைபேசி இணைப்புகள் மற்றும் பள்ளி கல்லூரிகள் போன்றவை மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் காஷ்மிரில் 4000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களை அடைத்து வைக்க சிறைகளில் போதிய இடமில்லாததால் அண்டை மாநிலங்களுக்கு அவர்களை அனுப்பி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இவர்கள் அனைவரையும் பொது பாதுகாப்பு சட்டம் எனும் பிரிவின் கீழ் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சட்டப்பிரிவின்படி கைது செய்யப்பட்டவர்களை இரண்டு வருடங்கள் வரை விசாரணையோ, குற்றப்பத்திரிகை பதிவு இல்லாமலோ சிறையில் வைக்கலாம். கடந்த சனிக்கிழமை காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் நடந்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை: இன்று முதல் பள்ளிகள் திறப்பு!