Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.13,500 கோடி மோசடி செய்த மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது! ராணாவை அடுத்து நாடு கடத்தப்படுவாரா?

Siva
திங்கள், 14 ஏப்ரல் 2025 (10:02 IST)
இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, பிரபல தொழிலதிபர் மெஹுல் சோக்ஸி, பெல்ஜிய காவல்துறையினரால்  கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சோக்ஸிக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த இன்டர்போல் சிவப்பு நோட்டீஸ் சமீபத்தில் நீக்கப்பட்டதை தொடர்ந்து, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வகையில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இணைந்து பெல்ஜியம் அரசிடம்  கோரிக்கை வைத்திருந்தன. அந்த கோரிக்கையை பெல்ஜிய அரசு ஏற்று, சட்ட நடவடிக்கையாக சோக்ஸியை கைது செய்தது.

சுமார் ரூ.13,500 கோடி அளவிலான பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில், நீரவ் மோடியுடன் இணைந்து மெஹுல் சோக்ஸியும் பெரும் பங்காற்றியதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. 2018ஆம் ஆண்டு இந்த மோசடியை அடுத்து இருவரும் இந்தியாவிலிருந்து வெளிநாடு தப்பிச் சென்றனர். இதில், நீரவ் மோடி இங்கிலாந்தில் தஞ்சமடைந்ததோடு, மெஹுல் சோக்ஸி கரிபியன் தீவுகளில் உள்ள ஆன்டிகுவாவை அடைவாகக் கொண்டார்.

தற்போது, மருத்துவ சிகிச்சைக்காக பெல்ஜியத்திற்கு வந்திருந்த சோக்ஸியை அந்நாட்டு போலீசார் கைதுசெய்துள்ளனர். அவருக்கு எதிராக அமலாக்கத்துறை மூன்று வழக்குகளிலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இதனுடன், சிபிஐயும் தனித்தனியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முகலாய மன்னர்களை போற்றுவதா? இந்தியாவின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது: பவன் கல்யாண்

கனவில் வந்த மு.க.ஸ்டாலின்..? வடபழனியில் திருஷ்டி கழித்த கூல் சுரேஷ்! - முதல்வருக்காக பாதயாத்திரை செல்ல திட்டம்!

மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் விஜய்.. ஈபிஎஸ் அழைப்பை நிராகரித்த தவெக..!

குரூப் 4 தேர்வை ரத்து செய்ய வேண்டும்: ஈபிஎஸ் கோரிக்கையால் அதிர்ச்சியில் பாஸ் ஆனவர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments