Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமூகநீதி கூட்டமைப்புக்கு ஆதரவு! – மெகபூபா முப்தி கடிதம்!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (08:45 IST)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னெடுக்கும் சமூகநீதி கூட்டமைப்பிற்கு ஆதரவு அளிப்பதாக மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் சமூகநீதிக் கொள்கையை முன்னெடுக்கும் வகையில் அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பு என்னும் கட்சிகளின் கூட்டமைப்பை தொடங்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த கூட்டமைப்பில் இணையுமாறு இந்திய தேசிய காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம், அதிமுக, பாமக உள்ளிட்ட 34 அரசியல் கட்சிகளுக்கு கடிதம் எழுதினார்.

இந்நிலையில் இந்த கூட்டமைப்பில் இணைவதாக முன்னதாக இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்திருந்தார், அவரை தொடர்ந்து சமூகநீதி கூட்டமைப்புக்கு ஆதரவு அளிப்பதாக ஜம்மு காஷ்மீரின் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள விரிவான கடிதத்தையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிருஷ்ணரை வேண்டுவதால்தான் வெள்ளம் வருகிறது! மக்கள் புகாருக்கு அமைச்சர் அளித்த ’அடடே’ பதில்!

தமிழக பெண் காங்கிரஸ் எம்பியின் செயின் பறிப்பு.. அமித்ஷாவிடம் அளித்த புகார்..!

நலம் காக்கும் ஸ்டாலினுக்கு நன்றி! சமீரா ரெட்டி வெளியிட்ட வீடியோ வைரல்!

காஷ்மீரில் கொல்லப்பட்ட லஷ்கர் தீவிரவாதிகள் பாகிஸ்தானியர்கள்: ஆதாரங்களை வெளியிட்ட இந்தியா..!

அந்த முகமும்.. அந்த உதடும்.. யப்பா! பெண் ஊழியரை பப்ளிக்காக வர்ணித்த ட்ரம்ப்!

அடுத்த கட்டுரையில்
Show comments