Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனிதர்களை போல் ஆலமரத்திற்கு மருத்துவ சிகிச்சை

மனிதர்களை போல் ஆலமரத்திற்கு மருத்துவ சிகிச்சை
, புதன், 18 ஏப்ரல் 2018 (21:01 IST)
தெலங்கானா மாநிலத்தில் உள்ள 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்துக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Baniyan Tree

 
தெலங்கானா மாநிலம் மெகபூபாநகர் மாவட்டத்தில் 700 ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ளது. இது 3 ஏக்கர் பரப்பளவிற்கு பரந்து விரிந்துள்ளது. 
 
ஆலமரத்தில் ஒரு கிளையில் பூச்சுத்தொற்று ஏற்பட்டது. இந்த பூச்சித்தொற்று மற்ற பகுதிக்கு பரவினால் மரம் பட்டுப்போய்விடும் அபாயம் உள்ளது.
 
ஆலமரத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் மரத்திற்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மனிதர்களை போலவே ஆலமரத்திற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
பாட்டில்களில் பூச்சிக்கொல்லி மருந்துகள் நிரப்பப்பட்டு மரத்திற்கு செலுத்தப்பட்டுள்ளன. மேலும், சத்து நிறைந்த உரங்கள் போடப்பட்டு வருகின்றன.
 
ஆலமரத்திற்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது அனைவரிடமும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உன்னவ் பகுதியில் மீண்டும் ஒரு பலாத்காரம்