Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனாவால் உயிரிழந்த தந்தை உடலை பார்க்க 50 ஆயிரம் லஞ்சம் கேட்ட மருத்துவ ஊழியர்: அதிர்ச்சி தகவல்

Advertiesment
கொரோனாவால் உயிரிழந்த தந்தை உடலை பார்க்க 50 ஆயிரம் லஞ்சம் கேட்ட மருத்துவ ஊழியர்: அதிர்ச்சி தகவல்
, செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (07:53 IST)
மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்த ஒருவரின் தந்தையின் உடலை பார்ப்பதற்காக அவருடைய மகனிடம் மருத்துவ ஊழியர் ஒருவர் 50 ஆயிரம் லஞ்சம் கேட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஹரிகுமார் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனை அடுத்து இந்த தகவலை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்துவிட்டு கொரோனாவால் மரணம் அடைந்தவர்களை அடக்கம் செய்யும் முறைக்கும் அவரது உடலை எடுத்துச் சென்றனர் 
 
அப்போது கொரோனாவால் உயிரிழந்த ஹரிகுமாரின் மகன் தனது உன் தந்தையின் உடலைப் பார்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் உடலைப் பார்க்க 50 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என மருத்துவ ஊழியர்கள் சொன்னதால் அவர் அதிர்ச்சி அடைந்தார். அதன் அந்த ஊழியர் 31 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று பேரம் பேசியதாக தெரிகிறது 
 
இது குறித்து காவல்துறைக்கு புகார் செய்ய ஹரிகுமாரின் மகன் முயற்சித்தபோதே அவரது தந்தையின் உடலை மருத்துவ ஊழியர்கள் தகனம் செய்து விட்டனர். கடைசியாக ஒருமுறை தனது தந்தையின் முகத்தைகூட பார்க்கவில்லையே என ஹரிகுமாரின் மகன் கதறியழுத சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்