மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் ஹிந்தியில் கற்பிக்கப்படும் என மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசிய போது அறிவுக்கும், ஆங்கிலத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அதனால் மத்திய பிரதேச மாநிலத்தில் இனி மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை ஹிந்தியில் கற்பிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஏழை விவசாயிகள் முதல் தொழிலாளர்கள் வரை பலருக்கு ஆங்கிலம் தெரியாத போது திறமையாளராக இருந்தும் மருத்துவம், பொறியியல் படிப்பு படிக்க முடியாத நிலையில் உள்ளனர் என்றும் ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் தாய் மொழியில் மருத்துவ கல்வி கற்பிக்கப்படுவது போல் மத்தியபிரதேசம் மாநிலத்திலும் தாய் மொழியில் தான் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பு கற்பிக்கப்படும் என்ற முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பு ஹிந்தியில் கற்பிக்கப்படும் முதல் மாநிலம் மத்திய பிரதேசம் தான் என்றும் அவர் பெருமையுடன் தெரிவித்துக் கொண்டார்.