Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறைச்சி சாப்பிடுபவர்கள் மனிதர்களே அல்ல! – ஐஐடி இயக்குனர் சர்ச்சை பேச்சு!

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (09:36 IST)
இமாச்சல பிரதேசத்தில் அடிக்கடி இயற்கை பேரிடர்கள் நிகழ காரணம் இறைச்சி சாப்பிடுவதே என ஐஐடி இயக்குனர் பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இந்திய மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் ஆண்டுதோறும் அதீத மழை பொழிவு, மேகவெடிப்பு, நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இவ்வாறு இமாச்சல பிரதேசத்தில் ஏற்படும் இயற்கை சீற்றங்களுக்கு அறிவியல்ரீதியான காரணங்கள் பலவற்றையும் அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இமாச்சல பிரதேசத்தின் மண்டியில் உள்ள ஐஐடி இயக்குனர் லக்‌ஷ்மிதார் பெஹெரா என்பவர் அளித்துள்ள விளக்கம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் அளித்த விளக்கத்தில் “இமாச்சல பிரதேசத்தில் மக்கள் இறைச்சி சாப்பிடுவதால்தான் இங்கு மேகவெடிப்பு, மழை வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் அடிக்கடி நடக்கின்றன. இறைச்சி உண்பவர்கள் நல்ல மனிதர்களே இல்லை” என்று கூறியுள்ளார்.

இயற்கை பேரிடர்களுக்கான காரணத்தை இறைச்சியில் சேர்த்து ஐஐடியின் இயக்குனர் ஒருவர் இவ்வாறு பேசியுள்ளது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments