Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோனியா, ராகுலை சந்திக்கும் மாயாவதி! 3வது அணி என்ன ஆச்சு?

Webdunia
ஞாயிறு, 19 மே 2019 (17:17 IST)
மக்களவை தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு இன்று முடிவடையவுள்ள நிலையில் அடுத்ததாக ஆட்சி அமைப்பது யார்? என்பது குறித்த காய்களை நகர்த்துவதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக உள்ளன.
 
குறிப்பாக கடந்த சில நாட்களாக பம்பரமாக இதுகுறித்து சுழன்று வரும் ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று ஒரே நாளில் மாயாவதி, அகிலேஷ் யாதவ், சீதாராம் யெச்சூரி, சரத்பவார் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பாஜக அல்லாத ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இவரது முயற்சி கிட்டத்தட்ட பலித்து வருகிறது.
 
இந்த தலைவர்களிடம் நடத்திய ஆலோசனைகளை அவ்வப்போது ராகுல்காந்தியுடன் பகிர்ந்து வரும் சந்திரபாபு நாயுடு, சோனியாவையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனால் காங்கிரஸ் தலைமையில் அடுத்த ஆட்சி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் பிரதமர் வேட்பாளர் என்று கூறப்பட்ட மாயாவதி இன்னும் சில நிமிடங்களில் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியை சந்திக்கவிருப்பதாகவும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டாட்சிக்கு ஆதரவு தர ஒப்புக்கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மாயாவதியே ஒப்புக்கொண்டால் மம்தாவும் காங்கிரஸ் தலைமையை ஏற்க ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில் டெல்லியில் இதுகுறித்து பரபரப்பான அரசியல் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா உள்பட 14 நாடுகளுக்கு விசா தடை விதித்த சவுதி அரேபியா: என்ன காரணம்?

அமைச்சர் நேரு மகன், சகோதரர் வீட்டில் சோதனை.. அமலாக்கத்துறை அதிரடி..!

மசூதி மேல் ஏறி காவிக்கொடியை பறக்கவிட்ட இந்து அமைப்பினர்.. உபியில் பரபரப்பு..!

ஆட்டம் கண்ட உலக பங்குசந்தை! ஹாயாக Vacation சென்ற ட்ரம்ப்! - பழிவாங்க சீனா எடுத்த முடிவு!

இன்று ஒரே நாளில் சுமார் 3000 புள்ளிகள் இறங்கிய சென்செக்ஸ்.. தலையில் கை வைத்த முதலீட்டாளர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments