Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற போது கலவரம் : எஸ்.பி உட்பட 14 பேர் பலி

ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற போது கலவரம் : எஸ்.பி உட்பட 14 பேர் பலி
, வெள்ளி, 3 ஜூன் 2016 (10:10 IST)
மதுராவில் உல்ள ஒரு பூங்காவை ஆக்கிரமித்திருப்பவர்களை வெளியேற்ற போலீசார் முயன்ற போது ஏற்பட்ட கலவரத்தில் போலீஸ் எஸ்.பி உட்பட 14 பேர் பலியான சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
உத்தரப்பிரேதச மாநிலம் மதுரா மாவட்டத்தின் ஜவகர்பாத் பகுதியில், 260 ஏக்கர் நிலபரப்பு கொண்ட ஒரு பூங்காவை,  ‘சத்தியாகிரகிகள்’ என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள் பல வருடங்களாக சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளனர்.
 
அவர்களை அங்கிருந்து அகற்றுமாறு அலகாபாத் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. எனவே போலீசார் அவர்களை வெளியேற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. வலுக்கட்டாயமாக அவர்களை வெளியேற்ற முயன்றபோது அங்கு மோதல் வெடித்தது.
 
ஆக்கிரமிப்பாளர்கள் போலீசார் மீது கற்களை வீசியுள்ளனர். அதன்பின் துப்பாக்கியிலும் சுட்டுள்ளனர். இதனால் போலீசார் கண்ணீர் புகைக்குண்டை வீசி தடியடி நடத்தினர். அங்கிருந்து ஏராளமான கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
 
அந்த கலவரத்தில் 2 போலீஸ் அதிகாரிகள் உட்பட 12 ஆக்கிரமிப்பாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
போலீசாரை தாக்கிய ஆக்கிரமிப்பாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மோதல் வெடித்த பகுதியில் உள்ள கேஸ் சிலிண்டர்கள் வெடித்ததல், குடிசைகள் தீப்பிடித்து எரிந்தது. எனவே அந்த பகுதி புகை மூட்டமாக காணப்படுகிறது. 
 
இந்த சம்பவம் ஜவகர்பாத் நகரில் பதட்டத்தை அதிகரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருணாநிதி பிறந்த நாள் விழா - தமிழுக்கு குட்பை