Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 2 April 2025
webdunia

வேறொரு பெண்ணுடன் திருமணம்.? காதலன் முகத்தில் ஆசிட் வீசிய காதலி..!

Advertiesment
acid

Senthil Velan

, வியாழன், 25 ஏப்ரல் 2024 (15:09 IST)
உத்தரபிரதேசத்தில் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றதால் ஆத்திரமடைந்த காதலி, காதலன் மீது ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
உத்தர பிரதேச மாநிலம் பலியா மாவட்டம் சித்தவுனி கிராமத்தைச் சேர்ந்தவர் ராகேஷ் பிந்த்.  இவர் அதே ஊரைச் சேர்ந்த லட்சுமி என்ற இளம்பெண்ணுடன் நெருங்கிப் பழகியுள்ளார். ஆனால், ராகேஷுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
 
திருமண சடங்குகள் நடந்து கொண்டிருந்த போது, மண்டபத்துக்கு வந்த லட்சுமி, தான் கொண்டு வந்திருந்த பிளாஷ்டிக் பையை ராகேஷ் முகத்தில் வீசினார். அதில் இருந்த கழிவறை சுத்தம் செய்யும் ஆசிட், முகத்தில் விழுந்து ராகேஷ் அலறித் துடித்தார்.
 
இதை அடுத்து உறவினர்கள் அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், லட்சுமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 


தன்னுடன் நெருங்கிப் பழகி விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருந்ததால் அவர் மீது ஆசிட் வீசியதாக போலீஸாரிடம் லட்சுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.35 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!