உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் திருமணமான இரண்டு மணி நேரத்திலேயே விவாகரத்து சம்பவம் நடந்துள்ளது. வரதட்சனை காரணமாக மாப்பிள்ளை மூன்று முறை தலாக் (விவாகரத்து) கேட்டதால் அவர்களின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
மோனிசாவுக்கும் முகமது ஆரிப் என்பவருக்கும் திருமணம் நடந்தது. மாப்பிள்ளை வீட்டினர் கேட்ட எல்லா பொருட்களையும் பெண் வீட்டார் கொடுத்துள்ளனர். ஆனால் கார் கொடுக்கவில்லை என்று மோனிசாவை ஆரிப் திட்டியுள்ளார்.
இதனால் அழுது கொண்டே இருந்த மோனிசா புகுந்த வீட்டுக்கு செல்ல மறுத்து, இந்த விவகாரம் உள்ளூர் பஞ்சாயத்துக்கு சென்றது. பஞ்சாயத்தின் நெருக்கடி காரணமாக ஆரிப் வீட்டினர் மோனிசாவை தங்கள் வீட்டிற்கு வர சம்மதம் தெரிவித்தினர்.
ஆனால் இந்த பிரச்சனைக்கு முடிவு கிடைக்காத நிலையில் ஆரிப், மோனிசாவிடம் மூன்று முறைக்கு மேல் தலாக் (விவாகரத்து) கேட்டதால், அவர்களுடைய திருமணம் இரண்டு மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது.
இதனையடுத்து பெண் வீட்டினருக்கு ரூ.2.25 லட்சம் ரூபாய் அபராதமாக கொடுக்கவேண்டும் எனவும், ஆரிப் 3 ஆண்டுகளூக்கு வேறு எந்த பெண்ணையும் திருமணம் செய்யக்கூடாது எனவும் பஞ்சாயத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.