Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜல்லிக்கட்டை நேரடியாக பார்க்க ஆசைப்படும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி: மார்கண்டேய கட்ஜுவின் தமிழர் பாசம்!

ஜல்லிக்கட்டை நேரடியாக பார்க்க ஆசைப்படும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி: மார்கண்டேய கட்ஜுவின் தமிழர் பாசம்!

Advertiesment
ஜல்லிக்கட்டை நேரடியாக பார்க்க ஆசைப்படும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி: மார்கண்டேய கட்ஜுவின் தமிழர் பாசம்!
, சனி, 21 ஜனவரி 2017 (09:09 IST)
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும் பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்கண்டேய கட்ஜு பல விவகாரங்களில் தமிழக மக்களுக்கு ஆதரவாக கருத்துக்கள் கூறி வருபவர். அவர் கடந்த இரண்டு வருடங்களாகவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கருத்து கூறிவருகிறார்.


 
 
சென்ற வருடமும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டபோது கருத்துக்கூறிய மார்கண்டேய கட்ஜு பொங்கல் விழா என ஜல்லிக்கட்டின் பெயரை மாற்றி விளையாடுங்கள் என கூறியிருந்தார்.
 
இந்நிலையில் மீண்டும் இந்த வருடம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து மார்கண்டேய கட்ஜு பேசி வருகிறார். இதனையடுத்து பிரபல தமிழ் வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் தான் ஜல்லிக்கட்டை நேரில் பார்த்து ரசிக்க ஆவலாக உள்ளதாக கூறினார்.
 
அந்த பேட்டியில் அவர், அவசர சட்டமானது குடியரசுத்தலைவரின் ஒப்புதலோடு அமல்படுத்தப்படுவதால் இனி இந்த வழக்கில் சட்டரீதியான பிரச்னை இருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். தமிழும், தமிழர்களும் நீண்ட பாரம்பர்யமும் பண்பாடும் உடையவர்கள். பல கலாச்சாரங்களைக் கொண்ட இந்தியாவில் அந்தந்த மாநிலங்களின் கலாச்சாரத்தையும் பாரம்பர்யத்தையும் மதிப்பது அவசியமாகிறது என்றார்.
 
மேலும், இளைஞா்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சட்டரீதியாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் பட்சத்தில் அதை நேரில் கண்டுகளிக்க மிகவும் ஆவலாக உள்ளேன் என்றார். ஜல்லிக்கட்டு நடத்தும் அமைப்புகள் ஏதாவது எனக்கு தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்தால், அந்த அழைப்பை கண்டிப்பாக ஏற்பேன் எனவும் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு தமிழில் வாழ்த்து கூறிய கிரிக்கெட் வீரர் சேவாக்!