ஜம்மு காஷ்மிரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய விதம் மிகவும் தவறானது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை தொடர்ந்து பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இன்று நிரூபர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கிய விதம் சரியானது அல்ல” என கூறியுள்ளார்.
மேலும் ,ஜம்மு காஷ்மீரில் 370 ஆவது சட்டப்பிரிவு நீக்கம் என்பது தற்காலிகமானது என நம்புவதாக கூறினார். காங்கிரஸ் கட்சி சட்டப்பிரிவை ரத்து செய்வதற்கு ஆதரவாக தான் வாக்களித்தது, அதற்கு எதிராக வாக்களிக்கவில்லை என மன்மோகன் சிங் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.