Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் 2 நாட்களுக்கு சிபிஐ காவல் நீட்டிப்பு- நீதிமன்றம் உத்தரவு

Webdunia
சனி, 4 மார்ச் 2023 (17:15 IST)
மணீஷ் சிசோடியாவை மேலும் 2 நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கியுள்ளது நீதிமன்றம்.
 

டெல்லி யூனியனில், புதிய மதுபான கொள்கை முறைகேடு புகாரில் கடந்த 26 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. இதனை அடுத்து அவர் சமீபத்தில், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நிலையில் அவருக்கு 5 நாள் சிபிஐ காவல் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் மணீஷ் சிசோடியா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம்  தலையிட மறுப்பு தெரிவித்ததோடு டெல்லி உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியது.

இந்த நிலையில்,  கைது செய்யப்பட்ட சிசோடியாவை  4 ஆம் தேதி வரை சிபிஐ காவலில் விசாரிக்க டெல்லி ரோஸ் அவன்யூ சிபிஐ நீதிமன்றம்  உத்தரவிட்டிருந்தது.

சிபிஐ கவலில் அடைக்கப்பட்டு, அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இன்றுடன் சிபிஐ காவல் நிறைவடைந்த நிலையில் மணீஷ் சிசோடியாவை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது, ஊழல் வழக்கில் கைதாகியுள்ள சிசோடியாவை மேலும் 3 நாட்கள் விசாரிக்க அவகாசம் தரும்படி அனுமதி கோரினர்.

அதேபோல் இவ்வழக்கில், மணீஷ் சிசோடியா 'தனக்கு ஜாமீன் தரும்படி, சிசோடியாவும் முறையிட்டதுடன்ம் 9 முதல் 10 மணி நேரம் என்னை அமரவைத்து ஒரே கேள்விகளை திரும்பத் திரும்ப கேட்டு மனவுளைச்சல் உண்டாக்கியதாக' அவர் குற்றம்சாட்டினார்.

இதையடுத்து, நீதிமன்றம், சிசோடியாவை மேலும் 2 நாட்கள்( மார்ச் 6ஆம் தேதி வரை) காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

உண்டியலில் விழுந்த ஐஃபோன் முருகனுக்கே சொந்தம்! பக்தருக்கு அதிர்ச்சி கொடுத்த கோவில் நிர்வாகம்!

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் படுகொலை..சட்டம் - ஒழுங்கு எங்கே.. அன்புமணி கேள்வி..!

செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

அடுத்த கட்டுரையில்
Show comments