Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இப்படியெல்லாம் எழுத முடியுமா? 11 விதமாக எழுதும் மாணவி! – வைரல் வீடியோ!

Advertiesment
Aadi swaroopa
, திங்கள், 6 பிப்ரவரி 2023 (13:58 IST)
கர்நாடகாவை சேர்ந்த மாணவி ஒருவர் ஒரே நேரத்தில் இரு கைகளாலும் 11 விதமாக எழுதும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கர்நாடகாவில் உள்ள மங்களூர் பகுதியை சேர்ந்த மாணவி ஆதி ஸ்வரூபா. இவர் சிறு வயது முதலாக இரு கைகளாலும் ஒரே சமயத்த்தில் எழுதும் திறமையை பெற்றுள்ளார். தொடர்ந்து இந்த திறமையை மெருகேற்றிய அவர் தற்போது 11 வகையான முறைகளில் எழுதுவது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. கண்ணை துணியால் கட்டுக்கொண்டும் எழுதி அசத்துகிறார் மாணவி ஆதி ஸ்வரூபா.

மூளையின் அனைத்து பகுதிகளையும் ஆக்டிவாக செயல்படுத்தினால் மட்டுமே செய்ய முடிய கூடிய இந்த செயலுக்கு Ambidexterity என்று பெயர். 10 லட்சம் பேரில் ஒருவருக்கு இந்த திறன் இருக்கும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே ஆதி ஸ்வரூபா தனது திறமைக்காக புக் ஃஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைகள் பல படைத்துள்ளார். சமீபமாக அவரது வீடியோ மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஒரே நேரத்தில் இரு கைகளாலும் எழுதுதல், ரிவர்ஸில் எழுதுதல், கண்ணை கட்டி கொண்டு எழுதுதல் என 11 வகையாக அவர் எழுதும் வீடியோ பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்டோரியா கவுரி நீதிபதியா? உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த வழக்கறிஞர்கள்!