Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா கண்டறியப்பட்டால் கட்டாய தனிமை - டெல்லி அரசு!

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (09:23 IST)
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா கண்டறியப்பட்டால் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவர் என்று டெல்லி அரசு அறிவிப்பு. 

 
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒளி ஒமிக்ரான் வைரஸ் இந்தியா உள்பட பல நாடுகளில் மிக வேகமாக பரவி வருவது மனித குலத்திற்கே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தியாவில் நுழைந்த ஒமிக்ரான் படிப்படியாக அதிகரித்து வருகிறது என்பதும் தமிழ்நாடு உட்பட கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் ஒமிக்ரான் வைரஸ் புகுந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனிடையே இதுவரை நாட்டின் எந்த மாநிலத்திலும் பதிவு செய்யப்படாத அளவில் அதிகபட்சமாக டெல்லியில் ஒமிக்ரான் பரவி வருகிறது. ஒமிக்ரான் கொரோனா வகை தொற்று அதிகரித்து வருவதையடுத்து டெல்லியில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
 
இதனைத்தொடர்ந்து தற்போது வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா கண்டறியப்பட்டால் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவர் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. அரசு ஏற்படுத்தியுள்ள மையங்களில் இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் சிகிச்சை பெறலாம் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments