Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2 இதயங்களுடன் வாழும் மனிதர்: வாவ் மெடிக்கல் மிராகிள்....

Advertiesment
2 இதயங்களுடன் வாழும் மனிதர்: வாவ் மெடிக்கல் மிராகிள்....
, திங்கள், 19 பிப்ரவரி 2018 (16:11 IST)
ஐதராபத்தில் சில நாட்களுக்கு முன்னர் நோயாளி ஒருவருக்கு இரண்டு இதயங்கள் பொருத்தப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மருத்துவ துறையில் மெடிக்கல் மிராகிள்ளாகவும் பார்க்கப்படுகிறது. 
கடந்த வாரம் இறுதயமாற்று அறுவை சிகிச்சைக்காக 56 வயதான முதியவர் ஒருவர் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு மூலைச்சாவு அடைந்த 17 வயது இளைஞரின் இதயம் பொருத்தப்படுவதாக இருந்தது. 
 
ஆனால், அந்த இளைஞரின் இதயம் முதியவருக்கு மிகவும் சிறியதாக இருப்பது கடைசி நேரத்தில் தெரியவந்தது. இருப்பினும் அறுவைசிகிச்சை செய்யப்பட வேண்டிய காட்டாயமும் ஏற்பட்டது. 
 
எனவே, மருத்துவர்கள் இளைஞரது இதயத்தையும், முதியவரின் இதயத்தையும் இணைத்து வைத்து அறுவைசிகிச்சை மேற்கொண்டுள்ளனர். தற்போது அந்த 56 வயது முதியவர் நலமாக உள்ளார். 
 
சுமார் 7 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இந்த அறுவைசிகிச்சை இதற்கு முன்னர் 149 பேருக்கு நடத்தப்பட்டுள்ளதாம். அந்த முதியவர் தற்போது நலமாக இருந்தாலும் மருத்துவர்கள் அவரை எச்சரிக்கையாகவே கவனித்து வருகின்றனராம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அம்மா ஸ்கூட்டர் வழங்க பிரதமர் மோடி சென்னை வருகை