Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏடிஎம் மெஷினில் கள்ளநோட்டுகளை போட முயன்ற நபர் – அலாரம் அடித்ததால் வங்கி ஊழியர்கள் அலர்ட்!

Webdunia
புதன், 18 நவம்பர் 2020 (17:44 IST)
கோவையில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் மில் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளை டெபாசிட் செய்ய முயனறுள்ளார் இளைஞர் .

கோவை வடபள்ளி பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் எந்திரம் உள்ளது. அதில் கேஷ் டெபாசிட் மெஷினும் உள்ளது. இந்நிலையில் அந்த எந்திரத்தில் 1.2 லட்ச ரூபாய் அளவிலான 500 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்துள்ளார் இளைஞர் ஒருவர். ஆனால் அதில் 40 நோட்டுகளை எடுத்துக் கொள்ளவில்லை. அதனால் அவர் மீண்டும் மீண்டும் முயன்றுள்ளார்.

அந்த நோட்டுகள் கள்ள நோட்டுகள் என்பதால் வங்கி ஊழியர்களுக்கு அலாரம் சென்றுள்ளது. இதையடுத்து அவர்கள் ஏடிஎம் கு வந்து அந்த நபரிடம் விசாரிக்க சம்மந்தப்பட்ட நோட்டுகளைப் பார்த்து அவை கள்ள நோட்டு என்பதால் போலிஸாருக்கு தகவல் சொல்லியுள்ளனர். இதையடுத்து போலிசார் அந்த நபரிடம் விசாரணை செய்துள்ளனர்.

அப்போது அந்த நோட்டுகளை தான் மதன்லால் என்பவரிடம் இருந்து வாங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். அவரிடம் விசாரணை செய்த போது தான் வேறு ஒரு நபரிடம் இருந்து வாங்கியதாக சொல்ல அந்த நபரை போலிஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments