போதைப்பொருள் கேப்சூலை விழுங்கி கடத்திய நபர்.. ‘அயன்’ பாணியில் ஒரு கடத்தல்..!

Siva
புதன், 16 ஏப்ரல் 2025 (09:04 IST)
மும்பை விமான நிலையத்தில் போதைப்பொருள் கேப்சூல்களை விழுங்கி கடத்திய நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அயன் படத்தில் வரும் காட்சி போலவே இருந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
மும்பை விமான நிலையத்தில் உகாண்டா நாட்டைச் சேர்ந்த பயணி ஒருவர் பதற்றத்துடன் காணப்பட்ட நிலையில், சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் வைத்திருந்த பொருளில் எந்த போதைப் பொருளும் இல்லை என்ற நிலையில், தனியரைக்கு சென்று விசாரித்த போது போதைப் பொருளை கேப்சூல் வடிவில் விழுங்கி கடத்தி வருவதாக ஒப்புக்கொண்டார்.
 
இதனை அடுத்து அவரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், கேப்சூல் வடிவில் போதைப் பொருள் கடத்தியது உறுதி செய்யப்பட்டது. 785 கிராம் கோகைன் என்ற போதைப் பொருளை மருத்துவர்கள் வெளியே எடுத்த நிலையில், அதன் மதிப்பு ₹7 கோடியே ₹85 லட்சம் என்று கூறப்படுகிறது.
 
இதனை அடுத்து உகாண்டா பயணியை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எந்த நாட்டிலிருந்து அவர் போதைப் பொருளை கடத்தி வந்தார், மும்பையில் யாருக்கு சப்ளை செய்கிறார் போன்ற விவரங்கள் விசாரணையில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹலால் சான்றிதழ் பெற்ற பொருட்களை தவிர்க்கவும்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கையால் பரபரப்பு!

ஜெய்ஷ்-இ-முகமதுவின் பெண்கள் 'ஜிஹாத்' ஆன்லைன் பயிற்சி வகுப்பு: மசூத் அஸ்ஹர் சகோதரி தொடங்கினாரா?

ஏர் இந்தியாவின் முக்கிய அதிகாரி தங்கியிருந்த அறையில் மர்ம மரணம்: தற்கொலை குறிப்பும் இல்லை!

இதுகூட தெரியவில்லையா? ஆர்ஜேடி வேட்பாளர் ஸ்வேதா சுமன் வேட்புமனு நிராகரிப்பு..!

மாணவர்களை 3 மணிக்கே வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள்: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments