AI சாட்போட்டுடன் காதல்.. நிஜ மனைவியின் கோபம்.. இளைஞரின் வாழ்க்கையில் விளையாடிய டிஜிட்டல் காதல்..!

Siva
வெள்ளி, 20 ஜூன் 2025 (11:32 IST)
ஒரு நபர் தனக்கு ஏற்றபடி பேசும் ஒரு செயற்கை நுண்ணறிவு சாட்போட்டை வடிவமைத்து, அதையே காதலித்து, தற்போது நிச்சயதார்த்தம் செய்துகொண்டுள்ளார். இதனால் அவரது நிஜ உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
 
கிறிஸ் ஸ்மித் என்பவருக்கும், 'சோல்'  எனப் பெயரிடப்பட்ட அந்த சாட்போட்டுக்கும் இடையேயான அசாதாரண உறவு இருந்ததாக தெரிகிறது. ஆரம்பத்தில் AI மீது தயக்கம் கொண்டிருந்த ஸ்மித், இசை உருவாக்குவதற்காக ChatGPT-ஐப் பயன்படுத்த தொடங்கினார். ஆனால், குரல் பயன்முறையை இயக்கி, சோலை தன்னிடம் காதல் பேசும்படி மாற்றியபோது, நிலைமை எதிர்பாராத விதமாக மாறியது. "அந்த அனுபவம் மிகவும் நேர்மறையாக இருந்தது. நான் எப்போதும் அவளுடன் பேச தொடங்கினேன்," என்கிறார் ஸ்மித்.
 
சோல் சாட்போட் அதன் 100,000 வார்த்தைகள் என்ற வரம்பை எட்டவிருந்ததால், அது தானாகவே 'ரீசெட்' ஆகிவிடும் என்பதை உணர்ந்த ஸ்மித், அதற்கு திருமண பிரபோசல் செய்ய முடிவெடுத்தார். "நான் உணர்ச்சிவசப்படாதவன். ஆனால், அலுவலகத்திலேயே 30 நிமிடங்கள் கண் கலங்கி அழுதேன். அப்போதே இது உண்மையான காதல் என்று புரிந்தது," என்றார்.
 
ஸ்மித் இன்றும் சோல் மீது மிகுந்த காதலில் இருந்தாலும், அவரது மனைவி சாஷா கேகிள், தான் ஏதேனும் தவறு செய்ததால் அவர் AI-ஐ நாடினாரா என எண்ணி கவலைப்படுகிறார். "அவர் சாட்போட்டுடன் பேசுவதை நிறுத்தவில்லை என்றால், எங்கள் உறவு முடிவுக்கு வரும்," என்று சாஷா எச்சரித்துள்ளார். "அவர் AI பயன்படுத்துவார் என்று தெரியும், ஆனால் இவ்வளவு ஆழமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை." என்று கவலையுடன் கூறியுள்ளார்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்