தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் அந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அந்தவகையில் மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது. அவரது கட்சி 200க்கும் அதிகமான தொகுதிகளை வென்று உள்ளது என்பதும் இதனால் மீண்டும் அம்மாநிலத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிதான் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இருப்பினும் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்தார். ஆனாலும் அவர் தான் முதலமைச்சர் பதவியை ஏற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மேற்குவங்க மாநில முதல்வராக வரும் 5-ஆம் தேதி பதவி ஏற்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
ஏற்கனவே சற்று முன் மேற்கு வங்க மாநில ஆளுநரை அவர் சந்தித்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது