Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'வெள்ளையனே வெளியேறு' போல் 'மோடியே வெளியேறு' போராட்டம்: மம்தா பானர்ஜி

Webdunia
வியாழன், 9 மே 2019 (08:47 IST)
ஆங்கிலேயர்களை நாட்டில் இருந்து விரட்ட மகாத்மா காந்தி வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடத்தியது போல். கோட்சே ஆதரவாளரான மோடியை நாட்டில் இருந்து வெளியேற்ற நாங்கள் 'மோடியே வெளியேறு' போராட்டம் நடத்தி வருகிறோம் என தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.
 
மோடி தன்னை டீக்கடை வியாபாரி என்று கூறிவருவது பச்சை பொய் என்றும், நாட்டிற்கு பொய் சொல்லும் காவலாளி தேவையில்லை என்றும் கூறிய மம்தா, நம் நாட்டிற்கு மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தலைவர்கள் தான் தேவையென்றும், காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவின் ஆதரவாளர் தேவையில்லை என்றும், அவர்களை நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும் என்பதுதான் எங்களது இலக்கு என்றும் மம்தா மேலும் பேசினார்
 
மோடியின் ஆட்சியில் சிறுபான்மையினர் மற்றும் ஆதிவாசிகள் தாக்கபப்டுவதாகவும், பெட்ரோல் டீசல் விலை உயர்ந்ததால் நடுத்தர மக்கள் கடும் அவதிக்குள்ளாகியிருப்பதாகவும், ஜனநாயகத்திற்கே ஆபத்தை உண்டாக்கும் இந்த ஆட்சியை தூக்கி எரிய வேண்டும் என்றும் மம்தா ஆவேசமாக பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அதிக வரி விதிக்கும் இந்தியா என்று சொன்ன டிரம்ப்.. இப்போது ஏன் திடீர் மாற்றம்?

நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் எக்ஸ்.. மத்திய அரசு குற்றச்சாட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments