Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அளவில் காங்கிரஸ் 40 தொகுதிகளில் கூட ஜெயிக்காது: மம்தா பானர்ஜி

Mahendran
சனி, 3 பிப்ரவரி 2024 (15:30 IST)
இந்திய அளவில் காங்கிரஸ் 40 தொகுதிகளில் கூட ஜெயிக்காது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிதெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
 இந்தியா கூட்டணி கிட்டத்தட்ட உடைந்துவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி கூட கொடுக்க மாட்டோம் என மம்தா பானர்ஜிதெரிவித்தார். அதேபோல் பஞ்சாப் மாநிலத்திலும் நாங்கள் தனித்து போட்டியிடப் போவதாக ஆம் ஆத்மி கூறியுள்ளது 
 
இந்த நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய மம்தா பானர்ஜி, இந்தியா கூட்டணியின் பொது வேட்பாளர்கள் 300 இடங்களில் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியிடம் நான் கூறினேன் ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்து விட்டனர்  
 
முஸ்லிம் வாக்காளர்களை தூண்டுவதற்காக ராகுல் காந்தி யாத்திரை செல்கிறார். காங்கிரஸ் 300 தொகுதிகளில் போட்டியிட்டாலும் 40 தொகுதிகளுக்கு வெல்ல மாட்டார்கள். காங்கிரஸ் உடன் கூட்டணிக்கு நாங்கள் தயாராகவே இருந்தோம் ஆனாலும் அவர்கள் அதை நிராகரித்து விட்டார்கள்.  இனிமேல் காங்கிரஸ் கட்சியுடன் எந்த பேச்சு வார்த்தையும் கிடையாது என்றும் நாங்கள் தனியாகவே பாஜகவை தோற்கடிப்போம் என்றும் தெரிவித்தார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு இன்னொரு அடி.. இந்தியாவின் நட்பு நாடாகிறது ஆப்கானிஸ்தான்..!

அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்.. இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பிரதமர்..!

மீண்டும் பரவுகிறதா கொரோனா வைரஸ்? ஹாங்காங், சிங்கப்பூரில் பரபரப்பு..!

டாய்லெட் வெடித்து சிதறியதில் 20 வயது இளைஞர் படுகாயம்.. விசாரணையில் திடுக் தகவல்..!

10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய இரட்டை சகோதரிகளுக்கு ஒரே மதிப்பெண்கள்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments