Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீர் திருப்பம்: நந்திகிராம் தொகுதியில் மமதா பானர்ஜி தோல்வி என அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (18:58 IST)
5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்ட நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. இருப்பினும் அம் மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நந்தி கிராமம் என்ற தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். அவர் காலையில் பின்னடைவில் இருந்த நிலையில் மதியத்திற்கு மேல் முன்னிலை பெற்று வந்தார்
 
இந்நிலையில் அவரது முன்னிலை விகிதம் அதிகமாக இருந்ததால் அவர் வெற்றி பெறுவார் என்று எண்ணப்பட்டது. இந்த நிலையில் திடீரென மம்தா பானர்ஜி தோல்வி அடைந்ததாகவும் நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments