Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமர் கோயில் திறப்பு நாளன்று என்ன செய்ய போகிறார் மம்தா பானர்ஜி: அதிரடி அறிவிப்பு!

Siva
புதன், 17 ஜனவரி 2024 (07:15 IST)
ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டோம் என காங்கிரஸ் கட்சி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் சிலர் அறிவித்துள்ள நிலையில் மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 
 
அந்த அறிவிப்பில் ராமர் கோவில் திறப்பு விழாவான ஜனவரி 22ஆம் தேதி மேற்குவங்க மாநிலத்தில் மத நல்லிணக்க பேரணி நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.  மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஹசரா முதல்  பூங்கா விளையாட்டு மைதானம் வரை இந்த நல்லிணக்க பேரணி நடத்தப்படும் என்றும் இந்த பேரணி செல்லும் வழியில் உள்ள மசூதிகள் தேவாலயங்கள் மற்றும் கோயில்களில் வழிபாடு நடத்தப்படும் என்றும் இந்த பேரணிகள் கலந்து கொள்ள அனைத்து மக்களையும் வரவேற்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். 
 
ஜனவரி 22ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த பேரணியில் தனது கட்சியின் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்று அவர் அறிவித்துள்ளார். ராமர் கோவில் திறப்பு விழா என்பது ஒரு அரசியல் விழாவாக மாறிவிட்டதாக விமர்சனம் செய்த மம்தா பானர்ஜி அதே நாளில் மத நல்லிணக்க பேரணி நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

இந்தில எங்க இருக்கு.. இங்கிலீஷ்லதானே இருக்கு! – குற்றவியல் சட்ட வழக்கில் மத்திய அரசின் குழப்ப விளக்கம்!

மீண்டும் ரூ.54,000ஐ கடந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 520 ரூபாய் உயர்வு..!

கேரளாவில் பிறந்தாலும் வாழ வெச்சது நீங்கதான்! தமிழ்நாட்டுக்கு நல்லதே செய்வேன்! – பாஜக எம்.பி சுரேஷ் கோபி!

கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் இறந்த பாம்பு! அங்கன்வாடி மையத்தில் விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments