Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக& அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பி அடித்தாரா மம்தா பானர்ஜி!

Webdunia
வியாழன், 18 மார்ச் 2021 (15:04 IST)
தமிழகத்தில் திமுக அளித்துள்ள வாக்குறுதியைப் போல மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ஆம் தேதி தொடங்கி எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திருணாமூல் காங்கிரஸ் கூட்டணிக்கும், பாஜக கூட்டணிக்கும் இடையே போட்டி இருக்கும் என சொல்லப்படுகிறது. மேற்கு வங்கத்தில் 2011 ஆம் ஆண்டு மம்தா பானர்ஜி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார். அதிலிருந்து தொடர்ந்து 10 ஆண்டுகளாக அவர் முதல்வராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் இந்த தேர்தலில் எப்படியாவது மீண்டும் வெற்றிபெற வேண்டும் என்பதில் மம்தா பானர்ஜி மிகவும் தீவிரமாக இருக்கிறார். இந்நிலையில் நேற்று வெளியான அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் ‘மீண்டும் திருணாமூல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பொதுப்பிரிவு குடும்பத்தினருக்கு மாதம் தோறும் 500 ரூபாயும், பட்டியல் பிரிவு மக்களுக்கு 1000 ரூபாயும் வழங்கப்படும் என்றும் அதை குடும்பதலைவியின் கையில் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை ஏற்கனவே தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் குடும்பத்தலைவிக்கு மாத ஊக்கத்தொகை அளிக்கப்படும் என அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments