Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக மூட்டை முடிச்சுடன் வெளியேறலாம்: மம்தா பானர்ஜி...

Webdunia
புதன், 28 மார்ச் 2018 (16:38 IST)
தேசிய அளவில் மூன்றாவது கட்சியை துவங்கவும், பாஜகவின் ஆட்சியை முழுமையாக காலி செய்வதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெளிவாக செயல்ப்பட்டு வருகிறார். 
 
சமீபத்தில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி எம்.பி. மற்றும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களை அடுத்தடுத்து சந்தித்தார்.
 
இதன் பின்னர் அவர் பின்வருமாறு பேசினார், அரசியல் தலைவர்கள் சந்திக்கும்போது அரசியல் பேச்சுவார்த்தைதான் நடக்கும். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். 
 
பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக எந்த கட்சி வலுவாக உள்ளதோ அந்த கட்சிக்கு உதவிட விரும்புகிறோம்.
 
மக்கள் பாஜகவுக்கு எதிராக உள்ளனர். பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கம், வங்கி மோசடி போன்ற பிரச்சினைகள் அடித்தட்டு மக்களையும் பாதித்துள்ளது. எனவே பாஜக மூட்டை முடிச்சுகளை கட்டுக்கொண்டு வெளியேறும் நேரம் வந்துவிட்டது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments