காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் தற்கொலை செய்வோம்; நவநீதகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

Webdunia
புதன், 28 மார்ச் 2018 (16:23 IST)
காவிரி மேலாண்மை அமைக்காவிடில் அதிமுக எம்.பி.க்கள் தற்கொலை செய்வோம் என்று அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன் ஆவேசமாக கூறியுள்ளார்.

 
உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காவிரி விவகாரம் தொடர்பாக நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார்.
 
அதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் அமைச்சர் நவநீதிகிருஷ்ணன் ஆவேசமாக பேசியுள்ளார். 
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் அதிமுக எம்.பி.க்கள் தற்கொலை செய்வோம் என்றும் இதை அமல்படுத்தவில்லை என்றால் பின்னர் அரசியல் சாசனம் எதற்கு? என்றும் ஆவேசமாக பேசியுள்ளது பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது நாளாக குறைந்த தங்கம் விலை.. ஆனாலும் ரூ.96,000க்கு குறையவில்லை..!

பங்குச் சந்தை நிலவரம்: சென்செக்ஸ், நிஃப்டி இன்று உயர்வு!

மூன்று முறை உத்தரவு பிறப்பித்தும் அதனை அரசு ஏன் நிறைவேற்றவில்லை? தமிழக அரசுக்கு நோட்டீஸ்..!

காங்கிரஸ் கேட்ட 70 சீட்!.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த மு.க.ஸ்டாலின்!...

அடுத்த கட்டுரையில்
Show comments