தாவூத் இப்ராஹிம் தீவிரவாதி அல்ல.. துறவியாக மாறிய பிரபல நடிகையின் பேச்சால் சர்ச்சை..!

Siva
வெள்ளி, 31 அக்டோபர் 2025 (18:03 IST)
மும்பைக் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் தாதா தாவூத் இப்ராஹிம் குறித்து பாலிவுட் நடிகையாக இருந்து துறவியாக மாறிய மம்தா குல்கர்னி பேசியதாக எழுந்த சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
உத்தரப் பிரதேச நிகழ்ச்சியில் பேசிய அவர், "தாவூத் இப்ராஹிம் தீவிரவாதி அல்ல, அவருக்கு குண்டுவெடிப்பில் தொடர்பில்லை" என்றும், "விக்கி கோஸ்வாமி எந்த தேசவிரோத செயலிலும் ஈடுபடவில்லை" என்றும் பேசியதாக செய்திகள் வெளியாகின. இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
 
இதையடுத்து மம்தா குல்கர்னி விளக்கமளித்துள்ளார். அதில், "நான் தாவூத் இப்ராஹிம் குறித்து பேசவில்லை, எனது முன்னாள் பார்ட்னர் விக்கி கோஸ்வாமி பற்றி மட்டுமே பேசினேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
 
முன்னதாக, போதைப்பொருள் வழக்கில் விக்கி கோஸ்வாமி கைது செய்யப்பட்ட பிறகு, செய்வதறியாமல் மம்தா குல்கர்னி இந்தியா திரும்பி ஆன்மீகத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் சந்திப்புக்கு அண்ணாமலை காரணமா? அவரே அளித்த விளக்கம்..!

வட மாநில தேர்தலின்போது, தமிழர்களுக்கு எதிராக பேசுவது பாஜகவின் வழக்கம்.. கனிமொழி

டிரம்ப் பெயரில் போலி ஆதார் அட்டை தயாரித்த எம்எல்ஏ.. காவல்துறை வழக்குப்பதிவு

மாதவிடாயை நிரூபிக்க சானிட்டரி நாப்கின்களை காட்டு.. அடாவடி செய்த 2 மேற்பார்வையாளர்கள் மீது வழக்கு!

மேயர் மற்றும் மேயரின் கணவர் இரட்டை கொலை வழக்கு: 5 பேருக்குத் தூக்கு தண்டனை!

அடுத்த கட்டுரையில்
Show comments