தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு 6 நாடுகளில் வங்கிக் கணக்குகள், போலி சொத்துகள் மற்றும் நிறுவனங்கள் உள்ளதாக அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது.
மல்லையாவிற்கு ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்காவில் பல சொத்துகள் உள்ளன. அமெரிக்காவில் பல போலி நிறுவனங்களையும் நிர்வகித்துள்ளார் என தெரியவந்துள்ளது.
இந்த சொத்துகள் மற்றும் வங்கிக் கணக்குகள், தொடர்பாக அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், சிங்கப்பூர், ஐயர்லாந்து, மொரீஷியஸ் ஆகிய 6 நாடுகளின் உதவியையும் மத்திய அமலாக்கத்துறை கோரியுள்ளது.