Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உங்கள் வீட்டு நாயாவது நாட்டுக்காக உயிரிழந்ததா? கார்கே பேச்சுக்கு கடும் கண்டனம்!

Advertiesment
Mallikarjun Kharge
, செவ்வாய், 20 டிசம்பர் 2022 (15:29 IST)
உங்கள் வீட்டின் நாயாவது நாட்டுக்காக உயிர் உயிரிழந்ததா?  என காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே ஆவேசமாகப் பேசினார். அப்போது அவர் ஒரு கட்டத்தில் உங்கள் வீட்டு நாயாவது  நாட்டுக்காக உயிரிழந்ததா?  என கேள்வி எழுப்பினார்.
 
அவருடைய பேச்சுக்கு மாநிலங்களவையில் கடும் கண்டனங்கள் எழுந்தன என்பதும் பாஜக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இது குறித்து அமைச்சர் பியூஸ் கோயல் அவர்கள் கூறியபோது தனது பேச்சுக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தந்தை கண் முன்னே மகள் கடத்தல்! அதிர்ச்சியளிக்கும் வீடியோ!