பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக உள்ள நிதிஷ்குமார், சாலை பணிகளை விரைந்து முடிக்க கோரி ஐஏஎஸ் அதிகாரி காலில் விழப் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஜே.பி.கங்கா பாதை திட்டம் அறிவிக்கப்பட்டு சாலைகளை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. நீண்ட காலமாக இந்த சாலை மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த திட்டத்தீன் கீழ் ஒரு பகுதி பணிகள் ஒருவழியாக முடிந்து நேற்று சாலையை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். அப்போது பேசிய முதல்வர் நிதிஷ்குமார் “மாநிலத்தின் நலனுக்காக சாலைப் பணிகளை விரைவாக முடியுங்கள். உங்கள் கால்களில் கூட அதற்காக விழுகிறேன்” என்று சொல்லிவிட்டு, ஒரு ஐஏஎஸ் அதிகாரி காலிலேயே விழப் போனார். உடனே அதிகாரி பதறிப்போய் பின்வாங்கினார்.
இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில் நிதிஷ்குமாரின் செயல்பாட்டை விமர்சித்துள்ள எதிர்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், பலம் அற்ற முதலமைச்சரால் இதைத்தான் செய்ய முடியும் என விமர்சித்துள்ளார்.
Edit by Prasanth.K