Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எங்கள் ஊழியர் செய்த தவறை மன்னிச்சிடுங்க! – விவசாயியிடம் மன்னிப்பு கேட்ட மஹிந்திரா!

Advertiesment
எங்கள் ஊழியர் செய்த தவறை மன்னிச்சிடுங்க! – விவசாயியிடம் மன்னிப்பு கேட்ட மஹிந்திரா!
, திங்கள், 31 ஜனவரி 2022 (08:52 IST)
கர்நாடகாவில் கார் வாங்க சென்ற விவசாயி ஒருவரை ஷோரூம் பணியாளர்கள் அவமதித்த விவகாரத்தில் மஹிந்திரா நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.

இந்தியாவில் நான்கு சக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் முக்கியமானது மஹிந்திரா நிறுவனம். இந்நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் பல இடங்களில் ஷோரூம்கள் உள்ளன. இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள மஹிந்திரா ஷொரூம் ஒன்றிற்கு சென்ற விவசாயி மஹிந்திராவின் பொலேரோ கார் விலை குறித்து விசாரித்துள்ளார்.

அதற்கு அந்த ஷோரூம் விற்பனையாளர் “இந்த காரின் விலை பத்து லட்சம், உன்னிடம் 10 பைசா கூட இருக்காது” என அந்த விவசாயியை அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த விவசாயியும், அவரது நண்பர்களும் குற்றம் சாட்டிய நிலையில், ஊழியரின் செயலுக்கு மன்னிப்பு கேட்டதுடன், பொலேரோ கார் ஒன்றையும் விவசாயிக்கு டெலிவரி செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலியல் தொழிலுக்காக சிறுமிகள் கடத்தல்! நால்வர் கைது! – சென்னையில் பரபரப்பு!