Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 15 April 2025
webdunia

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: நாளை கவர்னரை சந்திக்கும் முக்கிய தலைவர்கள்

Advertiesment
மகாராஷ்டிரா
, வெள்ளி, 15 நவம்பர் 2019 (13:04 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பாஜக மற்றும் சிவசேனா இணைந்து அமைக்க முயற்சித்த கூட்டணி ஆட்சி அமையவில்லை. இரு கட்சிகளும் தங்களுக்கே முதல்வர் பதவி வேண்டும் என்று பிடிவாதமாக இருந்ததால் இந்த கூட்டணியில் முறிவு ஏற்பட்டது 
 
இதனை அடுத்து தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க சிவசேனா முயற்சித்தது. ஆனால் இந்த முயற்சியும் ஆளுநர் கொடுத்த காலக்கெடுவுக்குள் முடியாததால் தற்போது அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது 
 
இருப்பினும் அரசியல் கட்சிகள் தங்களுடைய மெஜாரிட்டியை நிரூபிக்க முன்வந்தால் குடியரசு ஆட்சி திரும்பப் பெறப்பட்டு ஆட்சி அமைக்க வழிவகை செய்யப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான இந்த தகவலின்படி மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துவிட்டனர்.  இந்த 3 கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் நாளை ஆளுநரை சந்திக்க இருப்பதாகவும் இந்த சந்திப்பு சுமூகமாக முடிந்தால் இன்னும் ஓரிரு நாட்களில் அங்கு சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அம்பானியின் கபட ஆட்டம்!! திருத்தம் எனும் பெயரில் தில்லாலங்கடி...