Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டணி அமைக்க முட்டுக்கட்டை போட்ட சோனியா?

Webdunia
செவ்வாய், 5 நவம்பர் 2019 (13:11 IST)
சோனியா காந்தி மகாராஷ்டிராவில் சிவசேனாவை ஆதரிக்க திட்டவட்டமாக மறுத்து விட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. 
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து முடிவு அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகியும் இன்னும் அம்மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் என கருதப்பட்ட நிலையில் தற்போது யாருக்கு முதல்வர் பதவி என்பதில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது. 
 
இந்த நிலையில் பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்க சிவசேனாவுக்கு ஆதரவளிக்க தேசியவாத காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாகவும் விரைவில் சிவசேனா தலைமையில் மகாராஷ்டிராவில் ஆட்சி அமையும் என்றும் கூறப்படுகிறது.
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா 56 தொகுதிகளிலும் தேசியவாத காங். 54 தொகுதிகளிலும், காங்கிரஸ் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றறுள்ளதால் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங். இணைந்தால் 150 உறுப்பினர்கள் உள்ளது. ஆட்சி அமைக்க 145 உறுப்பினர்கள் போதும் என்பதால் இந்த கூட்டணி ஆட்சி அமைப்பது சிறந்ததாக பார்க்கப்படுகிறது. 
 
எனவே, கூட்டணி அமைப்பது குறித்தும் சிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்தும், தேசியவாத காங்கிரசின் தலைவரான சரத் பவார், டெல்லியில் காங்கிரசின் இடைக்காலத் தலைவரான சோனியா காந்தியை சந்தித்து பேசியதாக தெரிகிறது. ஆனால், சோனியா காந்தி மகாராஷ்டிராவில் சிவசேனாவை ஆதரிக்க திட்டவட்டமாக மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. 35 நாட்களில் 5 கொலை செய்த மாற்றுத்திறனாளி..!

17 ஆண்டுகளுக்கு பின் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. எப்போது?

கனமழை எச்சரிக்கை: தமிழக அரசு வெளியிட்ட அவசர கால உதவி எண்கள்..!

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்: தேதியை அறிவித்த எடப்பாடி பழனிசாமி..!

அதானி, மணிப்பூர் விவகாரங்களை எழுப்பிய எதிர்க்கட்சி எம்பிக்கள்: மக்களவை ஒத்திவைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments