Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா தொற்று அதிகரிக்குமே தவிர குறையாது - அமைச்சர் பகீர் தகவல்!!

Advertiesment
கொரோனா தொற்று அதிகரிக்குமே தவிர குறையாது - அமைச்சர் பகீர் தகவல்!!
, வெள்ளி, 20 மார்ச் 2020 (14:24 IST)
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகருக்குமே தவிர குறையாது என அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார். 
 
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியாவும் மெல்ல பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. நேற்று வரை 166 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 206 ஆக உயர்ந்துள்ளது. 
 
இதனிடையே, இத்தாலியை சேர்ந்த 69 வயது முதியவர் ஒருவர் ராஜஸ்தானில் கொரோனா பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார். இதனால் இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்நிலையில் கொரோனா வைரஸ் இந்த மாதத்திற்குள் கட்டுக்குள் வந்துவிடும் என்பது கேள்விக்குறியே, பிற நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டு கொண்டு வர வேண்டிய கடமை நமக்கிருப்பதால் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க கூடுமே தவிர குறைய வாய்ப்புகள் குறைவே என தெரிவித்துள்ளார் மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே. 
 
தற்போது மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா வைரஸ்: இந்தியாவில் அதிகரிக்கும் பாதிப்பு - தமிழகத்தின் நிலை என்ன? - Coronavirus India Live Updates