மகாராஷ்டிரா மாநிலத்தில் சிகரெட்களை சில்லறைகளாக விற்கக் கூடாது என மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
புகைப்பழக்கத்தால் உண்டாகும் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அந்த அட்டையில் புகைப்படங்களை பதித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் சிகரெட்களை சில்லறையாக விற்பதால் அந்த விழிப்புணர்வு ஏற்படாமல் போகிறது என்பதால் மகாராஷ்டிரா மாநில அரசு, இனி சிகரெட்களை சில்லறையாக விற்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கு அம்மாநிலத்தில் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்புக் கிடைத்துள்ளது. இதன் மூலம் சிறுவர்கள் புகைப்பழக்கத்துக்கு அடிமையாவது தடுக்கப்படும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.