Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா சிகிச்சை பெற்ற பாட்டி; கழிவறையில் பிணமாக கண்டெடுப்பு! – மருத்துவமனையின் அலட்சியம்!

Advertiesment
கொரோனா சிகிச்சை பெற்ற பாட்டி; கழிவறையில் பிணமாக கண்டெடுப்பு! – மருத்துவமனையின் அலட்சியம்!
, வெள்ளி, 12 ஜூன் 2020 (08:48 IST)
மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மூதாட்டி 8 நாட்கள் கழித்து கழிவறையில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவை சேர்ந்த ஹர்ஷல் என்பவர் தனது பாட்டிக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால் அவரை அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் திடீரென மூதாட்டி மயமாகியுள்ளார். 8 நாட்களாக அவரை மருத்துவமனையில் காணவில்லை. இந்நிலையில் மருத்துவமனை கழிவறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக புகார் வந்ததையடுத்து திறந்து பார்த்தபோது அங்கு ஹர்ஷலின் பாட்டி அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.

உடனடியாக அவர் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். எட்டு நாட்களுக்கு முன்னரே அவர் இறந்தும் கழிவறையை சுத்தம் செய்ய கூட யாரும் திறக்கவில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையை சுகாதாரமாக வைத்தில்லாமல் இருந்ததோடு, நோயாளிகளையும் முறையாக பராமரிக்க தவறியதற்காக அந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர்கள் ஐந்து பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தென்கொரியாவிலிருந்து வந்த பிசிஆர் கருவிகள்! – சோதனைகள் வேகமெடுக்கிறதா?