Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல்: கருத்துக்கணிப்பு பாஜகவுக்கு சாதகம்..!

Siva
வியாழன், 21 நவம்பர் 2024 (07:10 IST)
மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களில் நேற்று சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் நேற்று தேர்தல் முடிவடைந்த உடன் ஊடகங்கள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை எடுத்தன.

அதில் இரண்டு மாநிலங்களிலும் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணி 150 முதல் 170 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்றும் இந்தியா கூட்டணி 110 முதல் 130 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 288 தொகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 அதேபோல் ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக கூட்டணி 44 முதல் 53 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 25 முதல் 37 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது. இந்த மாநிலத்தில் மொத்தம் 81 தொகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் கருத்துக்கணிப்பின்படி முடிவுகள் வந்தால் இரண்டு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments