Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரேக்ளா பந்தயத்துக்கு தடையை நீக்கு: தமிழகத்தை சுட்டிக்காட்டும் மகாராஷ்டிரா

ரேக்ளா பந்தயத்துக்கு தடையை நீக்கு: தமிழகத்தை சுட்டிக்காட்டும் மகாராஷ்டிரா

Advertiesment
ரேக்ளா பந்தயம்
, செவ்வாய், 24 ஜனவரி 2017 (09:26 IST)
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி நிரந்தர சட்டத்தை உருவாக்கியுள்ளது தமிழக அரசு. தமிழக இளைஞர்களின் போராட்டத்தால் இது சாத்தியமானது. தற்போது தமிழகத்தை முன்னுதாரணமாக வைத்து மகாராஷ்டிராவிலும் அந்த மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டிருந்த ரேக்ளா பந்தயத்துக்கா போராட்டங்கள் தொடங்கியிருக்கின்றன.


 
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் ரேக்ளா பந்தயங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனை எதிர்த்து அந்த மாநிலத்தில் போராட்டங்கள் தொடங்கியிருக்கின்றன. தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வந்தது போல மகாராஷ்டிராவிலும் கொண்டு வரவேண்டும் என அம்மாநில முதலமைச்சர் தேவிந்திர பட்னாவிஸிடம் சிவசேனா கட்சி வலியுறுத்தியுள்ளது.
 
சில இடங்களில் உள்ளூர் விவசாயிகளுடன் சேர்ந்து போராட்டத்தை கையிலெடுத்துள்ளது சிவசேனா கட்சி. ஆனால் உள்ளாட்சி தேர்தல் வருவதால் பாஜகவுடன் சீட்டு ஒதுக்கீடு செய்வதில் உடன்பாடு ஏற்படாததால்தான் சிவசேனா இந்த போராட்டத்தை கையிலெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைப் போல மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நடந்துகொள்ள வேண்டும் என சிவசேனாவின் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிராவ் படேல் கூறியுள்ளார். பிரதமருடன் கலந்து பேசி இதற்கு ஒரு தீர்வை கொண்டுவர அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கலவரத்துக்கு காரணம் இளைஞர்கள் இல்லை: காவல்துறை!