மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர் துபாயில் கைது: இந்தியா கொண்டுவர நடவடிக்கை

Webdunia
புதன், 13 டிசம்பர் 2023 (13:01 IST)
மகாதேவ சூதாட்ட செயலி உரிமையாளர் துபாயில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை இந்தியா அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.  
 
மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்களில் ஒருவரான ரவி உப்பல் என்பவர் துபாயில் உள்ளூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  கடந்த வாரம் அவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை இந்தியாவுக்கு கொண்டு வர துபாய் போலீஸ் அதிகாரிகளுடன் அமலாக்கத்துறை பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.  
 
மகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலியை உருவாக்கி  பல மோசடிகள் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு கலந்துள்ளது. குறிப்பாக சத்தீஸ்கர் மற்றும் மும்பை போலீஸாருடன் மகாதேவ் சூதாட்ட செயலி மூலம் நடந்த பணமோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. அமலாக்கத்துறையின் வேண்டுகோளின் படி இன்டர்போல் போலீஸார் ரெட் நோட்டீஸ் வழங்கி இருந்த நிலையில் தற்போது அவர் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் அப்பாவை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் திமுகவின் கைக்கூலிகள்: அன்புமணி ஆவேசம்..!

தாவூத் இப்ராஹிமின் மும்பை சொத்துக்கள்.. ஏலம் கேட்க யாரும் வரவில்லை.. அச்சம் காரணமா?

தொடர்ந்து சரியும் தங்கம் விலை.. மீண்டும் ரூ.90,000க்கும் கீழ் ஒரு சவரன் தங்கம்..!

53 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன்.. என்னை யாரும் இயக்க முடியாது: செங்கோட்டையன்

ஜிபி முத்து, மனைவி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு.. பக்கத்து வீட்டு பெண்ணை தாக்கினார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments